இப்படி பண்றதுக்கு அந்த மனசு வேணும் சார்.. ரசிகர்களின் பாராட்டு மழையில் விஜய்பட நடிகை..!

Author: Rajesh
4 May 2022, 6:43 pm

நடிகை பொல்லம்மா பெங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்து தற்போது, திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘சதுரன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ’96’ திரைப்படத்தில் போட்டோகிராபி கற்றுக்கொள்ளும் மாணவியாக நடித்திருந்தார். ‘பிகில்’ திரைப்படத்திலும் இவரது நடிப்பு பாராட்டப் பெற்றது.

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷின் ‘செல்ஃபி’ திரைப்படத்தில் வர்ஷா நாயகியாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் இவரது நடிப்பு பாராட்டப் பட்டதைத் அடுத்து கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி சினிமாக்களிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மேலும் கதாநாயகி வேடம் என்றில்லாம் குணச்சித்திரப் பாத்திரங்கள் கிடைத்தாலும் அதில் தேர்ந்த நடிப்பை கொடுத்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறார்.

இந்நிலையில் நடிகை வர்ஷா பொல்லம்மா தனது கண்களை தானம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?