விவசாய நிலங்களுக்கு வழங்கப்படாத இழப்பீடு: பல்கலை., குடியேறும் போராட்டம்…கோவையில் பரபரப்பு..!!

Author: Rajesh
5 May 2022, 1:17 pm

கோவை: பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு கொடுக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என விவசாயிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மருதமலை ரோடு வடவள்ளி பகுதியில் பாரதியார் பல்கலை கழகம் உள்ளது. பல்கலை கழகத்தின் விரிவாக்க பணிகளுக்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலகங்களை கையகப்பபடுத்தியுள்ளது.

பல ஆண்டுகளை கடந்தும் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படாததை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நாடுளுமன்ற உறிப்பினர் நடராஜன் தலைமையில் பல்கலைக் கழகத்திற்குள் குடியேறும் போராட்டம் நடத்தினர்.

இழப்பீடு தொகையை கொடு இல்லையென்றால் நிலத்தை திருப்பிக் கொடு என கண்டன கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 999

    0

    0