“மிஸ் இந்தியா” கிரீடத்திடத்திற்கு போட்டி.. தமிழ்நாடு சார்பில் பிரபல நடிகரின் மகள் தேர்வு..!

Author: Rajesh
5 May 2022, 1:59 pm

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘அன்பறிவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஷிவானி ராஜசேகர். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பரவலான பாராட்டுக்களை பெற்றது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகையாக வலம் வரும் நடிகை ஷிவானி ராஜசேகர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘மிஸ் இந்தியா’ கிரீடத்திற்காக போட்டியிடவுள்ளார்.

நடிகர்கள் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ராஜசேகர் ஆகியோரின் மூத்த மகளான நடிகை ஷிவானி ராஜசேகர், தமிழகம் சார்பில் மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 30, 2022 அன்று அவர் ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதில் அனைவரின் கவனத்தை ஈர்த்த வகையில் இப்போது, அவர் மிஸ் இந்தியா கிரீடத்திற்காக போட்டியிடும் முதல் 31 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார்.

  • china decided to ban american movies shocking marvel fans சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?