புது ரூட்டை கையில் எடுத்த நெல்சன்.. படத்த முடிக்கிறதுக்குள்ள நொந்து நூலாகி விடுவார் போல..!
Author: Rajesh5 May 2022, 7:38 pm
டாக்டர் பட வெற்றிக்கு பிறகு, விஜய்யை வைத்து பீஸ்ட் படத்த எடுத்தார். நெல்சன். அந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே, ரஜினியின் அடுத்த படத்தினை நெல்சன் இயக்குவார் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. ஆனால் பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றதால், ரஜினியை படத்தினை நெல்சன் இயக்குவாரா என்ற கேள்வி எழுந்தது. பின்னர் நீண்ட இழுபறிக்கு பின்னர் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் நெல்சன் தான் என்று உறுதி செய்யப்பட்டது.
பீஸ்ட் படத்தின் தோல்வியால் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளான நெல்சன் இந்த படத்தை இயக்குவதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு காட்சியையும் பாத்து பாத்து எழுதி வருகிறார். இந்த படத்தின் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்வதில் மிகவும் மெனக்கிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்தது. அதன்பின் மற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் நெல்சன். ரஜினிகாந்த் தமிழக மக்கள் பேரன்பை பெற்றாலும் பூர்வீகம் கன்னடம் என்பதால் அங்கும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் நெல்சன் என்ன நினைத்தாரோ திடீரென்று அங்கு உள்ள ஒரு பிரபலத்தையே ரஜினியுடன் நடிக்க கேட்டுள்ளார்.
ஒருவேளை பேன் இந்தியா படமாக எடுக்கப்படும் என்ற நிலையில், மற்ற மாநில மொழியில் உள்ள முன்னணி நடிகரை, இந்த படத்தில் நடிக்க வைத்த விட வேண்டும் என்ற முனைப்புடன் இறங்கியுள்ளார். இந்த நிலையில் நடிகர் சிவராஜ் குமாரை ரஜினி 169ல் நடிக்க கேட்டுள்ளார். மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் அண்ணன் தான் சிவராஜ் குமார். இது போதுமே அங்குள்ள மக்களுக்கு ரஜினி இன்னும் கொண்டாடுவார்கள்.
இந்த படத்தினை எடுத்து முடிப்பதற்குள்ள நொந்து நூலாகி விடுவார் தான் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.