பட்டிணப் பிரவேச நிகழ்ச்சி நிச்சயம் நடக்கும்.. முதலமைச்சர் ஸ்டாலின் வாய்மொழி அனுமதி? தருமபுரம் ஆதீனம் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2022, 11:06 am

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் குன்றக்குடி ஆதீனம், கோவை பேரூர் ஆதீனம், மயிலம் ஆதீனம் உள்ளிட்டோர் நேற்று மாலை சந்தித்துப் பேசினர்.

அப்போது, திமுக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மயிலம் பொம்மபுர ஆதீனம், தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சியில் அரசியல் தலையீடு தேவையில்லை என்று முதலமைச்சர் தெரிவித்தாக கூறினார்.

மேலும், தருமபுர ஆதீன பட்டன பிரவேச நிகழ்ச்சியை நடத்த ஆவண செய்வதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, அமைச்சர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் தெரிவித்த கருத்து பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மயிலம் பொம்மபுர ஆதீனம், சர்ச்சையான கருத்துகளை ஜீயர் தவிர்த்திருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பட்டின பிரவேசம் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியதாக கூறினார்.

தமிழக அரசு ஆன்மிக அரசுதான்' - தருமபுரம் ஆதீனம் | The state of Tamil Nadu is  the spiritual state: Dharmapuram Aadeenam - hindutamil.in

பாரம்பரிய நடைமுறைக்கு தமிழக முதல்-அமைச்சர் அனுமதி அளித்துள்ளார், விருப்பப்பட்டுதான் தொண்டர்கள் ஆதீனத்தை சுமக்கின்றனர் என்றும் ஆதீனம் கூறினார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1114

    0

    0