சரக்கு வாகனம் மீது லாரி மோதி கோர விபத்து : துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 9 பேர் உயிரிழந்த சோகம்.. பிரதமர் மோடி இரங்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2022, 10:42 am

தெலங்கானா : இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று திரும்பிய டாடா ஏஸ் வாகனம் மீது நேருக்கு நேர் லாரி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டம் பிட்லம் மண்டலம் சில்லர்க்கி கிராமத்தைச் சேர்ந்த 22 பேர் டாடா ஏஸ் வாகனத்தில் காமரெட்டி பகுதியில் நடைபெற்ற இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவர்களுடைய வாகனம் எல்லாரெட்டி மண்டலம் ஹஸன்பள்ளி கேட் வளைவு அருகே வந்து கொண்டிருந்தபோது எல்லாரெட்டி பகுதியிலிருந்து நெல் மூட்டைகளுடன் வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.

இதில் டாடா ஏஸ் வாகனத்தில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் தீவிர காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பன்சுவாடா மருத்துவமனை மற்றும் காமாரெட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்தவர்களில் 7 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விபத்தில் பலியான சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெலுங்கானா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1308

    0

    0