தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 38 பேருக்கு தொற்று பாதிப்பு…உயிரிழப்பு ‘ஜீரோ’…சுகாதாரத்துறை தகவல்..!!

Author: Rajesh
9 May 2022, 8:55 pm

சென்னை; தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ள நிலையில், இன்று 38 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்றய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, இன்று புதிதாக 13 ஆயிரத்து 678 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் ஆண்கள் 25 பேரும், பெண்கள் 13 பேரும் உள்பட 38 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 20 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும் உள்பட 10 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 28 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

தமிழகத்தில் தொடர்ந்து 53வது நாளாக கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 454 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 62 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 917

    0

    0