வன்முறை வேண்டாம்… அமைதி காக்க வேண்டும்… இலங்கை மக்களுக்கு அதிபர் கோத்தபயே ராஜபக்சே வேண்டுகோள்..!!

Author: Babu Lakshmanan
10 May 2022, 6:12 pm

இலங்கையில் வன்முறை மூண்டுள்ள நிலையில், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் கோத்தபயே ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எதிர்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலைமை கட்டுக்குள் வராததை உணர்ந்த பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, திருமலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் கொழும்புவில் பிரதமரின் இல்லம் மற்றும் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது, ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களும் ராஜபக்சே ஆதரவாளர்களை பதிலுக்கு தாக்கினர். இதனால், நாடு முழுவதும் வன்முறை மூண்டது. மேலும், ராஜபக்சேவின் வீடு உள்பட எம்பிக்கள், மேயர்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். இதனால், அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபடக் கூடாது என்றும் இலங்கை அதிபர் கோத்தபயே ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “ஒருமித்த கருத்து மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக எடுக்கப்படும். வன்முறையை கைவிட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 1030

    0

    0