இந்த மாதிரி பருப்பு ரசம் செய்து கொடுத்தால் தொட்டுக்க கூட எதுவும் கேட்க மாட்டாங்க!!!

Author: Hemalatha Ramkumar
11 May 2022, 12:32 pm

பருப்பு ரசம் மற்ற ரச வகைகளில் இருந்து சற்று ருசியில் மாறுபடும் . மதிய உணவில் கண்டிப்பாக ரசம் ‌இருக்கும். எந்த வகையான குழம்பு இருந்தாலும் தயிர் சாதம் சாப்பிடுவதற்க்கு முன்பு ரசம் ஊற்றி சாப்பிடுவார்கள்.‌ ரசம் ருசியாக இருக்க வேண்டுமென்றால் அதிகம் கொதிக்க வைக்க கூடாது . பருப்பு ரசத்தை வெள்ளை சாதத்துடன் சேர்த்து ஏதேனும் ஒரு வகை வறுவல், பொரியல், அப்பளத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
சுவையான, கமகமக்கும் பருப்பு ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – 3/4 கப்
புளி‌ – எலுமிச்சை பழ‌‌ அளவு
தக்காளி – 2
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
ரசப்பொடி – 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் – 1
பச்சைமிளகாய் – 1
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
கடுகு , உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
மிளகு – 1 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
*முதலில் ஒரு குக்கரில் துவரம்பருப்பு, தக்காளி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

*அடுத்ததாக ஒரு கிண்ணத்தில் புளியை ஊற வைத்து அது‌ நன்கு ‌ஊறியதும்‌ , கரைத்து அந்த புளி கரைசலை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

*அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், பச்சைமிளகாய், பூண்டு இவை அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*பிறகு வேக வைத்துள்ள துவரம்பருப்பு, தக்காளி இரண்டையும் கைகளால் நன்றாக மசித்து, புளி கரைசலுடன் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

* பின்பு அந்த கலவையுடன் கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை, மஞ்சள்தூள், ரசப்பொடி, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

*அடுத்ததாக, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள மிளகு, சீரகம் கலவையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட வேண்டும்.

* பின்பு அந்த தாளிப்பை கரைத்து வைத்துள்ள புளி மற்றும் பருப்பு கலவையுடன் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

* பிறகு அடுப்பை சிம்மில் வைத்து பருப்பு ரசம் நுரைத்து வந்ததும், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

  • Sawadeeka Song Lyric Video Releaseபோடுங்கடா ஆட்டத்த..சொன்ன மாதிரி சொல்லி அடித்த அஜித்..”Sawadeeka”லிரிக் வீடியோ வெளியீடு..!
  • Views: - 1417

    0

    0