மே 14ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை : எதுக்கு தெரியுமா? உயர்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2022, 2:27 pm

நாளை மறுநாள் அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்,எம்பிஏ,எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான டான்செட் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுவதால் அதில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தின் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதள பக்கத்தில் டான்செட் 2022 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Who had SIX PACKS before Surya? சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!