தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்கள் : ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என ஆணையம் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan12 May 2022, 4:13 pm
தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன்10ல் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன்10ல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ்குமார், நவநீதகிருஷ்ணன், எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்பிகளின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைகிறது.
இதனிடையே, இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் சுஷில் சந்திரா வரும் 14ம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.