அரசு விழாவில் மகளின் கனவை பற்றி கூறிய பயனாளி : காணொலியில் பதிலை கேட்டு கண்கலங்கிய பிரதமர் மோடி!! (வீடியோ)
Author: Udayachandran RadhaKrishnan12 May 2022, 4:34 pm
அரசின் நலத்திட்ட பயனாகிளுடன் காணொலியில் பிரதமர் மோடி கலந்துரையாடிய போது கண்கலங்கிய காட்சி வைரலாகி வருகிறது.
குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் உள்ள அரசின் நலத்திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலியில் கலந்துரையாடினார். அப்போது கண் பார்வையில்லாத மாற்றுத்திறனாளி அயூப் படேல் என்பவருடன் பேசினார்.
அவரிடம் பேசிய பிரதமர் மோடி, மகள்களை படிக்க வைக்கிறீர்களா என கேட்டார். அதற்கு அவர் தனது மூன்று மகள்களில் ஒருவரை மருத்துவராக்க விரும்புவதாக கூறினார்.
மருத்துவ படிப்பை தேர்ந்தெடுக்க காரணம் என்ன என பிரதமர் மோடி அயூப் படேலின் மகளிடம் கேட்டதற்கு கண்பார்வையற்ற தந்தைக்கு பார்வை வர செய்வதற்காக மருத்துவம் படிக்க விரும்புவதாக கூறினார்.
இதைக்கேட்ட பிரதமர் சற்று நேரம் அமைதியானதுடன் கண்கலங்கினார். சிறிது நேரம் கண்ணீர் வர, நா தழுத்து பேச முடியாமல் இருந்த பிரதமர், கருணையே உங்கள் பலம் என கூறியதுடன், மகளின் மருத்துவராகும் கனவை நனவாக்க உதவி தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறு கூறினார்.
#WATCH | While talking to Ayub Patel, one of the beneficiaries of govt schemes in Gujarat during an event, PM Modi gets emotional after hearing about his daughter's dream of becoming a doctor & said, "Let me know if you need any help to fulfill the dream of your daughters" pic.twitter.com/YuuVpcXPiy
— ANI (@ANI) May 12, 2022
இந்த கூட்டம் நடைபெற்ற போது, சுற்றியிருந்தவர்கள் அனைவரும் பிரதமரின் செயலுக்கு கைத்தட்டினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வரைலாகி வருகிறது.
0
0