என்ன சொல்றீங்க… தாம்பத்ய உறவுக்கு பின் உங்களுக்கும் இந்த பிரச்சினை இருக்கா…???

Author: Hemalatha Ramkumar
12 May 2022, 6:38 pm

ஒரு சிலருக்கு உடலுறவு கொள்வது அதிக அழுத்தத்தைக் கொண்டு வரலாம். ஆனால் இன்னும் சிலருக்கு உடலுறவுக்குப் பிறகு பிறப்புறுப்பின் கீழ் பகுதியில் வலி ஏற்படுகிறது. அதன் போது எரியும் உணர்வு, சிறுநீர் கழிக்கும் போது வலி போன்றவை ஏற்படலாம்.

இவர்களில் நீங்கள் ஒருவராக இருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. ஃபோர்செட் என்பது யோனி திறப்பின் அடிப்பகுதியில் உள்ள உங்கள் பிறப்புறுப்பின் கீழ் பகுதி. இது இரண்டு உதடுகளும் ஒன்றாக இணையும் புள்ளியாகும். மேலும் இது மிகவும் மெல்லிய திசுக்கள், இது மிக எளிதாக கிழிந்துவிடும். இதன் காரணமாகவே உடலுறவுக்கு பிறகு ஒரு சிலருக்கு வலி ஏற்படுகிறது. எனவே, உங்கள் துணையுடன் ஆரோக்கியமான உடலுறவு வாழ்க்கையை அனுபவிக்க இரண்டு முக்கிய வழிகள் உள்ளன.

உடலுறவுக்குப் பிறகு பிறப்புறுப்பு எரிவதைத் தவிர்ப்பது எப்படி?
◆எண்ணெய் பயன்படுத்தவும்
மசகு எண்ணெயைப் பயன்படுத்துவது உடலுறவை எளிதாக்கும் மற்றும் திசுக்களைக் கிழிக்காமல் சீராக உள்ளே செல்லவும் அனுமதிக்கிறது.

ரொமான்ஸ் முக்கியம்:
ஃபோர்செட் கிழிந்து போகாமல் தடுக்க உள்ள இரண்டாவது வழி, நிறைய ஃபோர் பிளேயில் ஈடுபடுவது. ஃபோர் பிளே என்பது அதிக அளவில் முத்தமிடுதல், அரவணைத்தல், வாய்வழி உடலுறவு, பிறப்புறுப்புகள் மற்றும் அவர்களின் உடல் முழுவதும் தொடுதல், மார்பகங்களை தொடுதல் போன்றவற்றுக்குச் செல்லுங்கள். இது உங்கள் பிறப்புறுப்புத் திறப்பு விரிவடைவதற்கும் சுற்றியுள்ள திசுக்கள் விரிவடைவதற்கும் அனுமதிக்கும். எனவே, உடலுறவு கொள்வது எளிதாகிறது.

இருப்பினும், உடலுறவுக்குப் பிறகு நீங்கள் அடிக்கடி பிறப்புறுப்பில் எரிச்சலை அனுபவித்தால், மருத்துவரை அணுகுவது சிறந்தது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 1864

    2

    0