உடல் எடையை குறைத்த அஜித் – பிரபல நடிகருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்..!

Author: Rajesh
13 May 2022, 10:56 am

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்களில் மிக முக்கியமானவர் தான் நடிகர் அஜித். அண்மையில் அவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி இருந்தது, வினோத் இயக்கத்தில் வெளிவந்த அப்படத்தில் அஜித் பைக் ரேசராக கலக்கி இருப்பார், அஜித்தை அப்படி ஒரு அவதாரத்தில் காண ஏங்கிய ரசிகர்களுக்கு படம் பூர்த்தி செய்தது.

தற்போது அஜித் எச்.வினோத் இயக்கத்திலேயே தனது 61வது படத்தில் நடிக்கிறார். படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அவ்வப்போது அஜித்தின் புது லுக் புகைப்படங்கள் மட்டும் வெளியாகியுள்ளது. அதில் அஜித் நீண்ட தாடியுடன் வேறொரு லுக்கில் இருக்கிறார். அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல இளம் நடிகர் ஆதி, அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ரசிகர்கள் வழக்கம் போல் புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்கின்றனர். அந்த புகைப்படத்தில் உடல் எடையை குறைத்து இருப்பது போன்று அஜித் இருக்கிறார். ஆதி தனது திருமணத்திற்கு அஜித்தை அழைக்க நேரில் சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?