இதுக்கு முன்னாடி நீங்க பண்ணதே போதும்.. கையெடுத்து கும்பிடு போடும் விஜய் சேதுபதி..!
Author: Rajesh13 May 2022, 1:27 pm
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக அவர் நடித்துள்ள விக்ரம் படம் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் அவருக்கு வில்லன் வேடம் என கூறப்படுகிறது.
இதனை அடுத்து, விஜய் சேதுபதி நடித்து முடித்து ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தை அடுத்து விஜய் சேதுபதி எந்த தமிழ் படத்தில் நடிக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் யாரை கேட்டாலும் பதில் கிடைக்கவில்லையாம்.
அதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி தற்போது முழுக்க முழுக்க பாலிவுட் நடிகராக மாறி வருகிறாராம் . அவர் ஏற்கனவே மும்பைக்கார் எனும் ஹிந்தி படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
அதனை அடுத்து, கத்ரினா கைப் உடன் ஜோடியாக நடிக்க உள்ள மேரி கிறிஸ்த்மஸ் எனும் படத்தில் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து காந்தி டாக்ஸ் எனும் ஹிந்தி பட ஷூட்டிங்கிலும் தற்போது கலந்து கொண்டுள்ளார். இது போக இன்னும் 2 ஹிந்தி படம் கைவசம் இருக்கிறதாம்.
மேலும், தமிழில் கதை கேட்டால், சிந்துபாத் எடுத்த சு.அருண்குமார்இ மற்றும் சங்கத்தலைவன் எடுத்த விஜய் சந்தர் ஆகியோரும் கால்ஷீட் கேட்டு வருகின்றனராம். ஏற்கனவே நண்பர்களுக்காக என படம் செய்தது எல்லாம் போதும் என முடிவு எடுத்து பாலிவுட் பக்கம் தற்போது தஞ்சம் அடைந்துள்ளாராம்.