இதுக்குத்தான் இவ்வளவு பந்தாவா..? சிவாங்கி நடிப்பை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.. !
Author: Rajesh13 May 2022, 7:44 pm
சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களை பெற்று பிரபலமாக இருப்பவர் பாடகி சிவாங்கி. ஒரு தனியார் சேனலின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட அவருக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இவருக்காகவே அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். நடிகர் புகழ் மூலம் சிவாங்கிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. தற்போது சினிமாவில் பெரிய நடிகர்களில் படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.
இப்படி ஒரு வாய்ப்புகள் கிடைத்த சந்தோஷத்தில், சிவாங்கி ஏகத்துக்கும் பில்டப் கொடுத்து அலப்பரை செய்து வந்தார். மேலும் ஹீரோயின் ரேஞ்சுக்கு தன்னை நினைத்துக் கொண்டு படங்களில் புக் பண்ண வரும் இயக்குனர்களிடம் சம்பளம் போன்ற விஷயங்களில் கறார் காட்டியிருக்கிறார்.
இந்த நிலையில், அவர் நடித்திருந்த டான் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் சிவாங்கியின் நடிப்பை சிலர் கழுவி ஊற்றாத குறையாக பேசி வருகின்றனர்.
ஹீரோயினுக்கு பிரண்டாக நடித்திருக்கும் அவரின் நடிப்பை பார்த்த பலரும் உங்களுக்கு ஆக்டிங் செட்டாகாது, பாடுவதோடு நிறுத்திக்கங்க என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர். இதனால் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு தற்போது ஏமாற்றமே கிடைத்துள்ளது.