38வது நாள்…பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை: இன்றைய நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க…!!

Author: Rajesh
14 May 2022, 8:14 am

சென்னை: சென்னையில் 38வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் இன்று விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. எனினும், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஒரே விலையில் விற்கப்பட்டு வருகிறது.

இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் 38வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?