காவி நிறத்தில் கருப்பு மை.. தெருக்களின் பெயர் பலகைகளை இரவோடு இரவாக கருப்பு மையிட்டு அழித்த மர்மநபர்கள்…!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2022, 12:52 pm

புதுச்சேரி : காவி நிறத்தில் அமைக்கப்பட்ட தெருக்களின் பெயர் பலகையை மையிட்டு அழித்த மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் செஞ்சி சாலை ஆம்பூர் சாலை ஒட்டிய பகுதிகளில் புதியதாக தெருக்களில் பெயர்பலகை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்டது.

இந்த பெயர் பலகை காவி நிறத்தில் உள்ளதால் இருப்பதாக பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இரவோடு இரவாக மர்ம நபர்கள் புதிதாக அமைக்கப்பட்ட காவி நிற பெயர் பலகையை மையிட்டு அழித்துள்ளனர்.

புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் காவி மயம் தலைவிரித்து ஆடுவதாக திராவிட கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் காவி நிற பெயர் பலகையை மையிட்டு அழத்த இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் குறித்து பெரியகடை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?