விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்…தடுக்க தவறிய வனத்துறை: கால்நடைகளுட்ன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!!

Author: Rajesh
14 May 2022, 4:05 pm

கோவை: மேட்டுப்பாளையம் பகுதிகளில் தொடர்ந்து விவசாய பயிர்களையும் கால்நடை தீவனங்களையும் சேதப்படுத்தும் காட்டு யானைகளை தடுக்க தவறிய வனத்துறையை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் கால்நடைகளுடன் ஆர்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் ஊரக பகுதிகளான தாசம்பாளையம், குருமபனூர், நெல்லித்துரை, தேக்கம் பட்டி , சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வரும் காட்டுயானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

வாழை,தென்னை, கரும்பு போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருவதால் பெருமளவில் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.இதனால் பனப்பயிர்களை விளைவிப்பதை தவிர்த்து கால்நடை தீவனங்களான சோளம் பயிர்,மக்காச்சோளம்,சீமைப்புல் போன்றவைகளை பயிர் செய்து கால்நடைகளுக்கு அளித்து பால் உற்பத்தி செய்து வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

இதுவரை பணப்பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டுயானைகள் தற்போது கால்நடை தீவனங்களான மக்காச்சோளம், சீமைப்புல்,சோளப் பயிர் போன்றவற்றையும் சேதப்படுத்த துவங்கியுள்ளதால் கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திய நிலையில் தற்போது கால்நடைகள் தீவனத்தையும் விட்டு வைக்காமல் யானைகள் சேதப்படுத்தி வருகிறது.

எனவே பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுயானைகள் தடுக்க தவறிய வனத்துறை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் வேனுகோபால் தலைமையில் ஆடு,மாடு போன்ற கால்நடைகளுடன் பங்கேற்ற விவசாயிகள் வனத்துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். காட்டுயானைகளால் எவ்வித விவசாயமும் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டும் விவசாயிகள் பணப்பயிர்களை சேதப்படுத்தி வருவதால் அதனை தவிர்த்து கால்நடைகளை வளர்த்து அதற்கு உணவாக சேளத்தட்டு, மக்காச்சோளம் போன்றவை வளர்த்து அதனை உணவாக கால்நடைகளுக்கு அளித்து பால் உற்பத்தி செய்து வாழ்வாதாரம் பெற்று வருவதாகவும் அதனை கூட விடாமல் காட்டுயானை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

  • anthanan on vijay fadwa statement by muslim organization விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? ஃபத்வாவில் ஏன் பாரபட்சம்! பொங்கிய பிரபலம்