இரண்டாவது திருமணத்தை முடித்த டி.இமான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!
Author: Rajesh15 May 2022, 11:05 am
பல திரைப் பிரபலங்களின் விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியடையச் செய்து வருகிறது. இதனிடையே ரஜினி, விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள நடிகர்களின் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் டி இமான். சமீபத்தில் வெளியான அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களிலும் டி இமான் இசையமைத்துள்ளார்.
இவர் மோனிகா ரிச்சர்ட் என்பவரை கடந்த 2008-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனது மனைவியை சட்டபூர்வமாக விவாகரத்துப் பெற்றதாக அறிவித்திருந்தார்.
இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. சமீபத்தில் தனது முன்னாள் மனைவி மோனிகா ரிச்சட் மீது டி இமான் வழக்கு கொடுத்து இருந்தார். அதாவது தன்னுடைய மகள்களின் பாஸ்போர்ட் தன்னிடம் இருக்கிறது என்றும் அதை மறைத்து முறைகேடாக புதிய பாஸ்போர்ட் மோனிகா பெற்றுள்ளார் என புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இமானுக்கு மறுமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.