பத்தல பத்தல பாட்டில் வரும், “குத்துற கும்மா குத்துல” வரிகளுக்கு அர்த்தம் சொன்ன கமல்.. வைரல் வீடியோ..!
Author: Rajesh15 May 2022, 8:25 pm
கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. முழுக்க முழுக்க ஆக்ஷன் அதிரடி படமாக உருவாகியுள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அனிருத் இசையில் 6 பாடல்கள் உருவாகியுள்ளன. இதில் முதல் பாடலான ‘பத்தல பத்தல’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கமலஹாசன், விஜய் சேதுபதி, சிம்பு, உதயநிதி ஸ்டாலின், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் காணொலி மூலமாக இசைஞானி இளையராஜா வாழ்த்துரை வழங்கினார். இதையடுத்து பிரபலங்கள் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், பத்தல பத்தல பாட்டில் வரும் குத்துற கும்மா குத்துல குத்துல வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்ன என கேட்ட நிகழ்ச்சி தொகுப்பாளார். அதற்கு அர்த்தம் சொன்னார் கமல் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
Lokesh reaction 😂😂😂#PathalaPathala #VikramAudioLaunch pic.twitter.com/KeQvVxc5SJ
— Wαlk-Mαn Ajíth (@WalkMan_Ajith) May 15, 2022