விக்ரம் பட டிரெய்லரில் ஒரு நொடி வந்த நடிகை யார்.? இணையத்தில் அலசும் ரசிகர்கள்..!

Author: Rajesh
16 May 2022, 4:26 pm

கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அதிரடி படமாக உருவாகியுள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அனிருத் இசையில் 6 பாடல்கள் உருவாகியுள்ளன. இதில் முதல் பாடலான ‘பத்தல பத்தல’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமலஹாசன், விஜய் சேதுபதி, சிம்பு, உதயநிதி ஸ்டாலின், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் இந்த படத்தில் டிரெய்லர் வெளியானது. அதில் ஒரு நொடி மட்டும் இடம்பெற்றுள்ள நடிகையை பற்றி அறிந்து கொள்ள இளசுகளுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் நடிகை ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன். சுவரக்கத்தில் படத்தில் அறிமுகமானவர், சில படங்களில் மட்டும் நடித்துள்ளார். தற்போது விக்ரம் படத்தின் மூலம் ரசிகர்களின் அதிக கவனத்தைப் பெற்றுள்ளார்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 1701

    6

    1