வசதிக்கு இல்லனாலும் அசதிக்கோ? புதியதாக கட்டப்பட்ட கழிவறையில் சிறுநீர் கழிக்க சமையலறை பேசின் : சர்ச்சைக்குபின் அகற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2022, 6:07 pm

கரூர் : மக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய கழிப்பறையில் சிறுநீர் கழிக்க பீங்கானுக்கு பதிலாக சமையலறையில் பயன்படுத்தும் சில்வர் சிங்க் வைத்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா தலைமை இடமாகவும் சட்டமன்றத் தொகுதி தலைமை இடமாகவும் உள்ளது.

இங்கு தாலுக்கா அலுவலகம் பேரூராட்சி அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் வங்கிகள் அரசு மேல்நிலைப்பள்ளி நடுநிலைப் பள்ளிகள் தொடக்கப் பள்ளிகள் என பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ளது.

இங்கு பணியாற்றுபவர்கள் மற்றும் இங்கு வருபவர்கள் பலர் வெளியூரிலிருந்து வந்து செல்கின்றனர். மேலும் கிருஷ்ணராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்து வெளியூர்களுக்கு குறிப்பாக திருச்சிக்கு வேலைக்கு செல்பவர்கள் கல்லூரி பள்ளிகளுக்கு செல்லுபவர்கள் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் வந்து பின்னர் அங்கிருந்து வெளியூர்களுக்கு செல்ல வேண்டும்.

இப்படி தினந்தோறும் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் பகுதிகளுக்கு சுமார் 5 ஆயிரம் பேர் வந்து செல்வார்கள். இந்த பேருந்து நிறுத்தம் பகுதிகளில் கழிவறைகள் ஏதும் இல்லாத நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிந்தபின்னர் மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்ற பின்னர் பொதுமக்கள் பயணிகளின் கோரிக்கை ஏற்று தற்காலிக சிறுநீர் கழிப்பிடம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த சிறுநீர் கழிப்பதில் ஆண்கள் பெண்கள் என இரண்டு தரப்பினருக்கும் தனித்தனியே கழிவறைகள் ஏற்படுத்தப்பட்டது. ஆண்கள் பயன்படுத்தப்படும் சிறுநீர் கழிப்பதற்கு சிறிய பீங்கான் அமைப்பு ஏற்படுத்துவதற்கு பதிலாக ஹோட்டல்களில் கை கொள்வதற்கும், வீடுகளில் சமையல் அறைகளில் பயன்படுத்துவதற்கும் உள்ள வாஷ்பேசின் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிக தொகை செலவிடப்பட்ட நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத வகையில் இந்த வாஷ்பேஸினில் சிறுநீர் கழிப்பதற்கு பயன்படுத்த வைத்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

உடனடியாக எந்த வாஷ்பேஷன் ஏமாற்றிவிட்டு புதிய கழிவறை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் பயணிகள் வேண்டுகோள் விடுத்த நிலையில், தற்போது சர்ச்சைக்கு பின் சமையலறை பேசின் அகற்றப்பட்டு புதிய சிறுநீர் கழிக்கும் பீங்கான் பேசின் வைக்கப்பட்டுள்ளது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 1021

    0

    0