சேலையில் பார்த்த பிக்பாஸ் தாமரையா இது.? பேன்ட்-ஷர்ட்-ல எப்படி மாறிட்டாங்க. வைரல் வீடியோ.!
Author: Rajesh17 May 2022, 2:26 pm
மேடை நாடகங்களில் நடித்து அதில் வரும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை பார்த்து வந்தவர் தாமரை. கணவர், குழந்தையை தாண்டி அம்மா, சகோதரிகளையும் அவர் தான் கவனித்து வருகிறார். பிக்பாஸ் 5வது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக்பாஸ் 5வது சீசனில் அனைவருடனும் நன்றாக போட்டிபோட்டு விளையாடி வந்தார். அதேபோல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்குபெற்ற அவர் கடைசியில் வெளியேற்றப்பட்டார்.
இப்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தாமரை மற்றும் அவரது கணவர் ஜோடியாக களமிறங்கியுள்ளனர். எப்போதும் புடவையில் தோன்றும் தாமரை முதன்முறையாக பேன்ட்-ஷர்ட் அணிந்து ஐக்கி பெர்ரியுடன் ஒரு ஆட்டம் போட்டுள்ளார்.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நம்ம தாமரையா இது என ஆச்சிரியத்துடன் பார்த்து வருகின்றனர்.