வயசானாலும் உடம்பு சும்மா இரும்பு போல இருக்க உதவும் சுவையான ஸ்நாக்ஸ் ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
18 May 2022, 5:13 pm

ராகி எனப்படும் கேழ்வரகு தென்னிந்திய உணவுப் பொருட்களில் ஒன்று. கேழ்வரகில் மிகுந்த சத்துக்களும், ஆரோக்கியமும் நிறைந்துள்ளது. இதில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும். கேழ்வரகைக் கொண்டு பாரம்பரிய சுவையுடன் ராகி உருண்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு – 200( கிராம்)

வேர்க்கடலை – 50( கிராம்)

வெல்லம் – 100( கிராம்)

ஏலக்காய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்

எள் – 3 டேபிள்ஸ்பூன்

நெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

*ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

*சப்பாத்தியாக நெய் ஊற்றி சுட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* பின்பு வாணலியில் வேர்க்கடலை மற்றும் எள் இரண்டையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.

*பின்னர் வறுத்த வேர்க்கடலையின் தோலை நீக்கி பொடித்துக் கொள்ளவும்.

* கேழ்வரகு சப்பாத்தி ஆறியதும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த கலவையுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் ‌வெல்லம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக பிசையவும்.

* கேழ்வரகு உருண்டை கலவை கையில் ஒட்டும் பதத்தில் வரும் போது உருண்டைகளாகப் பிடிக்கவும்.

* இப்போது சுவையான, ஆரோக்கியமான, சத்து மிகுந்த கேழ்வரகு உருண்டை தயார்.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 1325

    0

    0