சிறையில் இருந்த விசாரணைக் கைதி தூக்கிட்டு தற்கொலை? தமிழகத்தில் நிகழ்ந்த அடுத்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2022, 9:25 am

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 36).

இவர் அதே பகுதியில் சின்னராசு என்பவர் கொலை வழக்கில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் கொலை வழக்கில் விழுப்புரம் அருகே வேடம்பட்டு கிராமத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் சிறைக்கு வந்து சுமார் மூன்று மாதமாகியும் உறவினர்கள் அவரை ஜாமீனில் எடுக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நேற்று மாலை சிறை கழிப்பறைக்குள் சென்ற முருகன் நீண்டநேரமாக வெளியே வராததால் சிறை போலீசாரும் சக சிறைக் கைதிகளும் உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் ஜன்னலில் தான் அணிந்திருந்த லுங்கியால் தூக்கில் தொங்கி உள்ளார்.

உடனடியாக சிறைத் துறையினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனை செய்த மருத்துவர் விசாரணைக் கைதி முருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலை சம்பவம் குறித்து காணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!