பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு திண்டுக்கல் காங்கிரசார் அறப்போட்டம்…!!
Author: Rajesh19 May 2022, 12:14 pm
திண்டுக்கல்: பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அறப் போராட்டம் நடைபெற்றது
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளன் 31 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தால் நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதற்கு தமிழ் ஆர்வலர்கள் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் இதனிடையே பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் தழுவியஅறவழி போராட்டம் நடைபெற்றது .
அதன்படி திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அறப் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் நடந்த இந்த ஆர்பாட்டத்திலெ கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் அமைதி வழியில் தங்கள் வாயில் வெள்ளை துணியை கட்டிக் கொண்டு தரையில் அமர்ந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மேலும் வன்முறையை எதிர்ப்போம் கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது என்பது உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் கலந்து கொண்டனர்