ஆதி – நிக்கி கல்ராணி திருமண நிகழ்ச்சி.. ஆலுமா டோலுமா பாடலுக்கு டான்ஸ் ஆடிய நடிகர்கள்.. வைரல் வீடியோ..!

Author: Rajesh
19 May 2022, 2:05 pm

படங்களில் ஒன்றாக நடித்த போது ஆதி – நிக்கி கல்ராணி ஜோடி காதலில் விழுந்து கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தமும் செய்துக் கொண்டது. இதையடுத்து அவர்களின் திருமணம் நேற்று நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.

முன்னதாக மெஹந்தி, சங்கீத் போன்ற திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடத்தப்பட்டன.

மெஹெந்தி சென்னையில் உள்ள நிக்கியின் இல்லத்தில் நடந்தது. அதில் நடிகர்கள் நானி மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோருடன் ஆதியும், நிக்கியும் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு நடனமாடி மெஹந்தி விழாவை சிறப்பாகக் கொண்டாடினர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர்கள் ஆர்யா, சாயிஷா, மெட்ரோ ஷிரிஷ் உள்ளிட்டோர் ஆதி – நிக்கியின் திருமண பார்ட்டியில் கலந்துக் கொண்டனர்.

  • gautham karthik shortened his name as grk தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?