பைக்கை எடுக்கும் முன் இத கவனியுங்க : பள்ளி வளாகத்தில் நின்றிருந்த பைக்கில் புகுந்த நல்ல பாம்பு.. பதறிப் போன மாணவர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2022, 4:42 pm

திருப்பூர் : இரு சக்கர வாகனத்தில் இருந்த 4 அடி நல்ல பாம்பை லாவகமாக மீட்கப்பட்டதால் பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருப்பூர் – வஞ்சிபாளையத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் துரையரசன். இவர் பள்ளி வளாகத்தில் தனது
இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்.

பின்னர் வேலை முடிந்ததும் இருசக்கர வாகனத்தை எடுக்க முயற்சித்த போது வாகனத்தின் முன்புறத்தில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவிநாசியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர்கள் விஜய் மற்றும் கவுதம் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் இரு சக்கர வாகனத்தின் உள்ளே இருந்த சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை நீண்ட நேரமாக போராடி லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

ஆசிரியரின் இரு சக்கர வாகனத்தில் இருந்த நல்ல பாம்பால் பள்ளி வளாகத்தில்
சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாலை நேரம் என்பதால் மாணவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று விட்ட காரணத்தால் விபரீதம் எதுவும் ஏற்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1042

    0

    0