ராமஜெயம் கொலை குற்றவாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் சன்மானம் : கோவை நகர் முழுவதும் உலா வரும் சுவரொட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2022, 5:39 pm

கோவை : ராமஜெயம் கொலை குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு வின் உடன்பிறந்த சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012 மார்ச் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அந்நிலையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா ராமஜெயத்தை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதன்படி திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ராமஜெயத்தை ரவுடிகள் கடத்திச் சென்று படுகொலை செய்தது தெரிய வந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் சென்றது. அவர்களும் தொடர்ந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

கொலை நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் பிடிபடாமல் உள்ள நிலையில் சிபிசிஐடி போலீசார் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சரியான தகவல்களை துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும்.

மேலும் துப்பு கொடுப்பவர்களின் தகவல் ரகசியம் காக்கப்படும் என்று போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்து உள்ளனர். இந்த போஸ்டர் கோவை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 792

    0

    0