கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு : பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
19 May 2022, 11:19 pm

இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்று கொண்டிருந்த பெண் கழுத்தில் இருந்து தங்க தாலிச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஸ்ரீகாகுளம் சூர்யா மஹால் பிரதான சாலையில், கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கழுத்திலிருந்து தங்க தாலி சங்கிலியை பறித்துச் சென்றனர்.

இரண்டு இடங்களில் அடுத்தடுத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 150 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை பறித்து தேசிய நெடுஞ்சாலைக்கு தப்பி சென்றதை போலீசார் முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!