மாற்றுத்திறன் கொண்ட 6 வயது சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை… தனியார் பள்ளியின் ஆசிரியர் மீது தாய் புகார்..!!

Author: Babu Lakshmanan
20 May 2022, 5:39 pm

சென்னை : மாற்றுத்திறன் கொண்ட 6 வயது மாணவியை பள்ளி ஆசிரியர் அடித்து சூடு வைத்ததாக மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை – வியாசர்பாடி தாமோதரன் 1வது தெரு பகுதியில் வசித்து வருபவர் திவ்யா (27). இவருடைய கணவர் முத்து கிருஷ்ணன் நான்கு வருடத்திற்கு முன்பு இறந்த விட்டார். இவருக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

திவ்யா பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார். இவரது 6 வயது மகள் பிறந்தது முதல் மன வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளதால், அவரை பெரம்பூரில் உள்ள ஸ்பெஷல் மாணவர்களுக்கான தனியார் பள்ளியில் கடந்த நான்காம் தேதி சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் வழக்கம் போல் கடந்த 17ம் தேதி காலையில் சிறுமியின் தாத்தா கலைச் செல்வன் என்பவர் சிறுமியை பள்ளியில் விட்டு விட்டு மதியம் நேரத்தில் சிறுமியை வீட்டுக்கு அழைத்து செல்ல வரும் போது, பள்ளி ஆசிரியர் கவிதா என்பவர் சிறுமியின் தாத்தாவை அழைத்து சிறுமியின் வலது கணுக்கால், இடது கணுக்கால் மற்றும் வலது மணிக் கட்டில் காயம் உள்ளது என்றும், எதற்காக பள்ளிக்கு அனுப்புகிறீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு கலைச் செல்வன் சிறுமி வீட்டில் இருக்கும் போது எந்த வித காயமும் ஏற்படவில்லை என்றும், பள்ளியில் தான் காயம் ஏற்பட்டு உள்ளது என்று கூறி, சிறுமியின் தாய் திவ்யாவிற்கு தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் சிறுமியின் தாய் திவ்யா பள்ளிக்கு வந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஆத்திரத்தில், பள்ளியில் உள்ள கதவின் 2 கண்ணாடிகளை தலையில் இடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார் சிறுமியை பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரை பெற்று கொண்ட செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?