குஜராத், இமாச்சலிலும் காங்கிரசுக்கு தோல்விதான்… உதய்பூர் சிந்தனைக் கூட்டத்தை புஸ்வானமாக்கிய PK…அதிர்ச்சியில் சோனியா..!!

Author: Babu Lakshmanan
20 May 2022, 6:26 pm
Quick Share

டெல்லி : உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் குறித்து அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறிய கருத்து அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்தடுத்து பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் அடைந்த தோல்வியால் காங்கிரஸ் கட்சியும், அந்தக் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் துவண்டு போயுள்ளனர். எனவே, கட்சியை புதுப்பித்து, நேர்மறையான பாதையில் பயணித்தாக வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க தேவையான வியூகங்களை அக்கட்சியின் தலைமைக்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்தார். இது பற்றி ஆலோசிக்க குழுவையும் சோனியா அமைத்து ஆராய்ந்தார். இதனிடையே, பிரசாந்த் கிஷோர், காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் முக்கிய பொறுப்பை கேட்டதாகவும், அதனை காங்கிரஸ் வழங்க மறுத்ததாகவும் சொல்லப்பட்டது. இதனால், அவர் காங்கிரஸில் இணையும் முடிவை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, முழுக்க முழுக்க கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘சிந்தனை அமர்வு’ என்ற காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு கடந்த 13ம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடைபெற்றது.

Image

இந்தக் கூட்டத்தில், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்துவது குறித்து மாநாட்டில் வியூகம் வகுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் அர்த்தமுள்ளதாக எந்த முடிவையும் எட்டவில்லை என அக்கட்சியின் அரசியல் ஆலோசகராக இருக்கும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், “உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு என்னை அடிக்கடி கேட்டு வருகின்றனர்.

என்னைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியின் சிந்தனை கூட்டத்தில் அர்த்தமான எந்த முடிவையும் எட்டவில்லை. காங்கிரஸ் தற்போது நடைமுறையையே
தொடர முடிவு செய்துள்ளது. அதேபோல, காங்கிரஸ் தலைவர்கள் இன்னும் சிறிது காலம் நீடித்து இருக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத், இமாச்சலப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் வரை இந்த நடைமுறை தொடரும், எனக் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசகராக இருக்கும் பிரசாந்த் கிஷோர், அடுத்தடுத்து காங்கிரசுக்கு எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருவது, அக்கட்சியினரிடையே மேலும் மேலும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 771

    0

    0