டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு… 5,200 இடங்களுக்கு 11 லட்சம் பேர் போட்டி… 9 மணிக்கு பிறகு வந்தால் அனுமதியில்லை…!!

Author: Babu Lakshmanan
21 May 2022, 8:53 am

தமிழகம் முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 11 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

அரசு பணியிடங்களில் உள்ள காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அதன்படி பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5239 பணியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது.தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு இன்று கோவை மாவட்டத்திலும் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 150 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 48,039 நபர்கள் எழுத உள்ளனர்.

காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு நடத்துவதற்காக 60 மொபைல் அலுவலர்கள் 300 தேர்வுக்கூட ஆய்வு அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 10 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுத வருபவர்களுக்கு கிருமிநாசினிகள் வழங்கப்பட்டு பின்னர் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.காலை 9 மணிக்கு பின் மையத்துக்கு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. நுழைவுச் சீட்டு, அடையாள அட்டை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும்.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அனுமதி இல்லை. கைக்குட்டை, தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொள்ளலாம். கருப்பு நிற பந்துமுனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தேர்வர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 757

    0

    0