நான் எப்போ அப்படி சொன்னேன்… மலிவு விலை அரசியல் செய்யாதீங்க : சர்ச்சை பேச்சுக்கு ஐ.லியோனி விளக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan21 May 2022, 9:21 pm
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடி பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில் இரண்டு நாட்கள் முன்பு நடைபெற்றது.
இதில் தலைமைக்கழக கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசுகையில், செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு நடந்துச்சென்ற சமுதாயத்தை இன்று வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே என அழைக்க வைத்து திராவிட மாடல், திராவிட புரட்சியை செய்த தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவித்தார்.
இதில், செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு நடந்துச்சென்ற சமுதாயத்தை இன்று வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே என அழைக்க வைத்து திராவிட மாடல், திராவிட புரட்சியை செய்த தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று லியோனி பேசிய வீடியோ வைரலாக பரவியது.
இந்நிலையில், அந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், முன்பு செருப்பை கையிலும் தலையிலும் சுமக்க வைத்து கொடுமைப் படுத்திய ஆதிக்க சமுதாயத்திடமிருந்து விடுதலை பெற வைத்து இன்று பெரும் பொறுப்புகளை பெற வைத்த திராவிட இயக்கமும், தலைவர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்தான் என்ற பொருளில் சொல்லப்பட்டது ஒழிய எந்த சமுதாயத்தையும் புண்படுத்தும் நோக்கமல்ல.
ஒரு வார்த்தையை எடுத்து, நமது கைகளை வைத்தே, நமது கண்களை குருடாக்கும் பாஜகவின் மலிவான அரசியலை நம் மக்கள் புரிந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.