43 வயது பெண்ணை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாண வீடியோ எடுத்த பாலிடெக்னிக் மாணவர் : சென்னையில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2022, 6:44 pm

சென்னை : தனியாக வசித்து வந்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை அடையார் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான பெண், இவர் திருவல்லிகேணியில் ஒப்பந்த அடிப்படையில் ஹவுஸ் கீப்பிங் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அந்தப்பெண் கடந்த 20 ஆம் தேதி பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பியபோது அவரது வீட்டின் வெளியே மர்ம நபர் ஒருவர் நின்றிருந்துள்ளார்.

இதையடுத்து அவரை யாரென கேட்டபோது அந்த மர்ம நபர் அத்துமீறி வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அப்பெண்ணை நிர்வாணமாக படமெடுத்ததோடு செல்போன் எண்ணையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து அன்றிரவே அந்தப்பெண்ணை தொடர்பு கொண்ட அந்த நபர், போலீசில் புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவம் குறித்து தனது மகளிடம் கூறியதை அடுத்து நேற்று திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் செல்போன் எண்ணை வைத்து மர்ம நபரை தேடி வந்த போலீசார், அவரை மெரினா பீச்சில் வைத்து கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விஷால் (வயது 20) என்பதும் அவர், பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அடையார் அனைத்து மகளிர் போலீசார், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!