இரவு நேர பார்ட்டிகளில் இளம் நடிகையுடன் பிரபல நடிகர்.? மனைவி எடுத்த அதிரடி முடிவு..!
Author: Rajesh23 May 2022, 11:46 am
எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் தமிழ் திரையுலகில் நுழைந்து, தற்போது டாப் நடிகர்களுக்கே டப் கொடுத்து வருபவர் தான் அந்த நடிகர். சமீபகாலமாக அந்த நடிகர் நடித்த தெல்லாம் ஹிட்.. அந்த அளவிற்கு அவரது நடிப்பில் வெளியான படங்கள் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது தமிழ் திரையில் டான் ஆகவும் உயர்ந்துள்ளார்.
இப்படி சினிமா துறையில் கொடிகட்டி பறந்து வரும் ஒரு கிசுகிசு ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அந்த டான் நடிகர் தன்னுடன் இணைந்து இரண்டு ஹிட் படத்தில் நடித்த அந்த இளம் நடிகையுடன் அதிக நெருக்கம் வருவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இருவரும் அடிக்கடி தனியாக இரவு நேர பார்ட்டிகளுக்கும் சென்றுள்ளதாகவும் தமிழ் திரையுலகில் இந்த செய்தி உலா வந்துள்ளது. இந்நிலையில் இந்த தகவல் எப்படியோ அந்த டான் நடிகரின் மனைவிக்கு சென்றுள்ளது. இதனால் கடுப்பான அவர் அதிரடி முடிவை எடுத்துள்ளாராம். அதன்படி இனி அந்த நடிகையுடன் எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்றும் எந்த விழாவுக்கும் அழைக்கக்கூடாது எனவும் அடுக்கடுக்காக பல கண்டிஷன்களை போட்டுள்ளாராம். நிலமையை புரிந்து கொண்ட நடிகரும் மனைவி பேச்சுக்கு ஓகே கூறியதாக கூறப்படுகிறது.