17 மாவட்டத்தில் ஐடி விங் தயார் : நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி… முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி நம்பிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2022, 1:48 pm

திமுகவினர் எத்தனை வழக்குகள் போட்டாலும் தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம் அவர்களால் நம்மை தூக்கில் எல்லாம் போட முடியாது உங்களோடு நாங்கள் இருக்கின்றோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆவேசமாக பேசினார்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் கோவை சிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்துகொண்ட இதில் கோவை நீலகிரி ஈரோடு சேலம் உட்பட 17 மாவட்டங்களில் இருந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவைச்சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, விளம்பரத்தில் ஓடும் ஆட்சி என்றால் அது திமுகதான். மக்களுக்காக எதையும் செய்யாத திமுக அரசு, அதிமுகவின் திட்டங்களுக்கு திமுகவின் ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுகிறார்கள்.

திமுகவினர் நம்மை மட்டும் மிரட்டவில்ல, ஊடகங்களையும் மிரட்டுகிறார்கள். தமிழகத்தில் ஆட்சி அமைத்த ஒரு ஆண்டில் 85 சதவிகிதம் மக்களின் எதிர்ப்பை பெற்ற ஆட்சி திமுக ஆட்சி என்று மக்களின் கருத்துகணிப்பு செய்திகள் வெளியாகிறது.

என்மீது எத்தனை வழக்கு போட்டாலும் தவறில்லை போட்டுகொள்ளுங்கள். உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எந்திரத்தில் குளருபடி செய்துதான் வெற்றி பெற்றார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன்.

மேலும் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் திமுகவினரின் இந்த வழக்குகளுக்கெல்லாம் கவலைபடவேண்டாம் எத்தனை வழக்கு போட்டாலும் பார்த்துக்கொள்ளலாம்.

அதை திரம்பட கையாள தமது வழக்கறிஞர் பிரிவு தயாராக உள்ளது. திமுகவினர் நம்மை தூக்கில் போடமுடியாது, திமுகவினர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதை ஆதாரத்துடன் மக்களிடம் கொண்டு சேருங்கள். ஒவ்வொறு மக்களுடமும் திமுகவின் அவலங்களை கொண்டு சேருங்கள்.


மேலும் தமிழகத்தில் பெரிய கட்சி என்றால் அதிமுகதான் புரட்சி தலைவர்,17 லட்சம் தொண்டர்களை உறுவாக்கி விட்டு சென்ற கட்சியை ஒன்றறை கோடி தொண்டர்களாக உறுவாக்கியது நமது மாண்புமிகு அம்மா அவர்கள்.

மேலும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெருவது உறுதி, சில ஊடகங்கள் விவாத நிகழ்ச்சியில் அதிமுகவினருக்கு பேச வாய்பளிக்காததால் மற்ற ஊடகங்களில் அதிமுகவினர் பங்கு பெருவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது. சில ஊடகங்கள் தற்பொழுது மாறிவருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால், சட்டம் ஒழுங்கு கெட்டுபோய், ரவுடி ராஜ்யம் வந்துவிடும் மின்வெட்டும் வந்துவிடும் வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி, இதை யாராலும் தடுக்க முடியாது.

தகவல் தொழில்நுட்ப புரிவினரின் மீது பதியப்படும் வழக்குகள் குறித்து கவலைபட வேண்டாம், உங்களுடன், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருபெரும் தலைவர்கள் உங்களுடன் துணையாக நாங்களும் இருப்போம்.

ஊடகத்துறையினர் யாருக்கும் பயப்படாமல் நேர்மையாக செய்தியை வெளியிடுங்கள். நீட்டை வைத்து திமுக அரசியில் செய்து வருகிறது. சமீபத்தில்கூட மேட்டுப்பாளையத்தில் சகோதரி ஒருவர் நீட் அச்சத்தால் உயிரிழந்தார். ஊடகங்கள் அதையெல்லாம் வெளிக்கொண்டு வாருங்கள். என்று ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றினார்.

இதில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே. ஆர்.ஜெயராமன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன், அதிமுக அமைப்பு செயலாளர் எ.கே செல்வராஜ், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 782

    0

    0