சூர்யா – பாலா படம் கைவிடப்பட்டதா..? ரசிகர்களுக்கு வரப்போகும் பேரதிர்ச்சி தகவல்..!

Author: Rajesh
23 May 2022, 7:05 pm

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களின் மிக முக்கியமானவர் தான் பாலா. தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் பாலாவின் கம்பேக்வுக்காக தான் அதிக ஆவலோடு காத்திருக்கின்றனர். அந்தளவுக்கு தனது முந்தைய திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர். ஆனால், அவரின் சமீபத்திய திரைப்படங்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பபை மீண்டும் பூர்த்தி செய்ய இந்த முறை இயக்குனர் பாலா சூர்யாவுடன் கோர்த்து புதிய படத்தை ஆரம்பித்து இருந்தார்.

இந்த படத்தில் சூர்யா உடன், ஜோதிகா, கீர்த்தி ஷெட்டி, மமிதா பாஜு என பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் நாகர்கோவிலில் நடைபெற்ற போது, இயக்குனர் பாலா சூர்யாவுடன் நடந்து கொண்ட விதம் பிடிக்காமல் படப்பிடிப்பின் பாதியில் கிளம்பியதாக கூறப்படுகிறது.
ஆனால் தொடர்ந்து படத்தயாரிப்பு நிறுவனம் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவித்து, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த நிலையில், தற்போது வரை அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கவில்லையாம்.

இது பற்றி திரையுலகினர் கூறுகையில், இந்த படம் டிராப் என்பது போல தகவல்கள் வெளியாகிறதாம். இயக்குனர் பாலா, ஷூட்டிங்கில் சூர்யாவை அதிகமாக தொந்தரவு செய்து வருகிறாராம். அதனால் மீண்டும் அந்த படம் ஆரம்பிக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கிறதாம். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க, விரைவில், சூர்யா – இயக்குனர் பாலா படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியிட படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  • Anirudh Christmas Celebration ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!
  • Views: - 887

    4

    0