நம்ப வெச்சு ஏமாத்திட்டாரு.. பிரபல சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது பணமோசடி புகார்!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 May 2022, 8:56 pm

சர்ச்சைக்குரிய இயக்குநராக வலம் வருபவர் தெலுங்கு மற்றும் இந்தி பட இயக்குநர் ராம் கோபால் வர்மா. இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் கோப்பட சேகர் ராஜு பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா மீது மோசடி புகார் கொடுத்திருக்கிறார்.

ஐதராபாத் அருகே 2019-ம் ஆண்டு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக `திஷா’ என்ற பெயரில் படம் தயாரிக்க ராம் கோபால் வர்மாவிற்கு ராஜூ 2020-ம் ஆண்டு முதலில் 8 லட்சமும் அடுத்த சில நாட்களில் மேலும் 20 லட்சமும் கொடுத்தார்.

படம் வெளியாவதற்கு முன்பு பணத்தைக் கொடுத்துவிடுவதாக ராம் கோபால் வர்மா உறுதியளித்திருந்ததாக ராஜு தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். ஆனால் 2021-ம் ஆண்டுதான் ராம் கோபால் வர்மா படமே தயாரிக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன். படம் தயாரிப்பதாகக்கூறி பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார் என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அப்புகாரின் அடிப்படையில் ஐதாராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மோசடி, நம்பிக்கையை மீறியது உட்பட பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu