டெண்டர் பில்லுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்… ஷாக்கான ஒப்பந்ததாரர் : கையும் களவுமாக கைது செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர்!!
Author: Udayachandran RadhaKrishnan24 May 2022, 9:17 pm
திருச்சி : டெண்டர் பில்லுக்கு 6 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் பாலம், கட்டிடம், சாலை போடும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
ஒப்பந்ததாரர்களில் ஒருவரான முஹம்மது இஸ்மாயில் என்பவர் புத்தாநத்தம் ஊராட்சியில் நடைபெற்று முடிந்த பணிகளுக்கான ஒப்பந்த தொகையை பெறுவதற்கு ஊராட்சி செயலர் வெங்கட்ராமனை அணுகினார்.
அப்போது 4 லட்சம் ரூபாய் செக் கொடுக்க வேண்டும் என்றால் 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வெங்கட்ராமனை கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத இஸ்மாயில் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார். அவரின் அறிவுறுத்தலின் பேரில் 6ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணத்தை இஸ்மாயில், வெங்கட்ராமனுக்கு கொடுத்துள்ளார்.
வெங்கட்ராமன் லஞ்ச பணத்தை வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து வெங்கட்ராமன் அலுவலகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும் அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் ஏராளமாக கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.