22 நாட்களில் 19வது கொலை… தமிழகத்தில் தொடரும் குற்ற சம்பவங்கள்… வேடிக்கை பார்க்கிறதா இந்த விடியா அரசு..? இபிஎஸ் காட்டம்…!!

Author: Babu Lakshmanan
25 May 2022, 4:41 pm

தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், விடியா அரசு அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா..? என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக நேற்று கூறியிருந்தார்.

ஆனால், இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு போகவில்லை எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் பொது வெளியில் பாஜக மாவட்ட பட்டியலின தலைவர் பாலச்சந்தர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிந்தாரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பாலசந்தர் (30), மத்திய சென்னை பாஜக எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்ததால், 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

நேற்று தன்னுடைய பாதுகாப்பு காவலர் பாலகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து சாமிநாயக்கன் தெருவில் நின்று தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, காவலர் டீக்குடிப்பதற்காக பக்கத்தில் இருந்த டீக்கடைக்கு சென்ற நேரத்தில், அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

EPS - Updatenews360

இந்த நிலையில், தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், விடியா அரசு அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா..? என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில்,குறிப்பாக சென்னையில் கொலை சம்பவங்கள் அதிகரித்து,தலைநகர் கொலைநகராக மாறி இருக்கிறது என நேற்று நான் தெரிவித்திருந்த நிலையில், நேற்று மாலையே சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அரசியல் பிரமுகர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார்.

CM Stalin - Updatenews360

இது சமூக விரோதிகளுக்கு காவல்துறை மீதான அச்சம் முற்றிலும் போய்விட்டதையும், அதன் காரணமாகவே சட்டத்திற்கு புறம்பான செயல்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டதையும் அப்பட்டமாக காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கிறதா இந்த விடியா அரசு?, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 801

    0

    0