பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டிய வழக்கு : காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை… என்ஐஏ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan25 May 2022, 7:33 pm
பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டிய வழக்கு தொடர்பாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவன் யாசின் மாலிக்கை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்திருந்தது.
திகார் சிறையில் அடைக்கப்பட் யாசின் மாலிக் மீது பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு டெல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில் இன்று இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டு உறுதியானதால் குற்றவாளி யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி என்ஐஏ சிறப்பு கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.