விவசாயத்தால் வருமானம் இல்லை.. விவசாய நிலத்தை விற்பனை செய்யுங்க : அமைச்சரின் அட்வைஸ்.. அதிர்ச்சியில் விவசாயிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2022, 8:05 pm

திண்டுக்கல் : விவசாயத்தால் விவசாயிகளுக்கு எந்த ஒரு வருவாயும் இல்லை., சாலை விரிவாக்க திட்டத்தின் விவசாய நிலத்தின் விலை பன்மடங்கு உயர்கிறது என்று முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்ட விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இரு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக்கும் சாலை விரிவாக்கப் பணி துவக்க விழா செம்பட்டி – ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை விரிவாக்க துவக்க விழாவினை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இதில் மெட்டூர், பலக்கனூத்து, ஒட்டன்சத்திரம், தாராபுரம், திருப்பூர் சாலை வழித்தடங்களை இரு வழி சாலையிலிருந்து நான்கு வழி சாலையாக புதிய சாலை விரிவாக்க பணியை துவக்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியதாவது :

நான்கு வழி சாலை அமைப்பதனாலேயே அனைத்து இடங்களும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதில் விவசாய நிலங்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், விவசாயிக்கு விவசாயத்தால் எந்த ஒரு வருவாயும் இல்லை. ஆனால், அவர்களின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பொழுது அருகிலுள்ள விளைநிலங்களின் விலை உயர்கிறது இதுவே எதார்த்த நிலையும் ஆகும் என்று கூறினார்
.
இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆத்தூர் கிழக்கு ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி கன்னிவாடி ஊராட்சி மன்ற தலைவர் சிவகுரு மதுரை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்து மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன் போக்குவரத்து துறை மின்வாரியத் துறை ஊழியர்கள் சீவல்சரகு ஆத்தூர் அக்கரைப்பட்டி கன்னிவாடி உள்ளிட்ட ஊராட்சிகளில் கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் துணை தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?