நடிகர், பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கியவர் தான் டி.ராஜேந்தர். இவரது மகனான சிம்புவும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். பொதுவாக படங்களில் நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பதை தவிர்த்து வந்தவர் டி.ராஜேந்தர்.
ஆனால், சிம்புவோ நடிகைகளுடன் லிப்லாக் காட்சிகளில் அசால்டாக நடிப்பவர், சிம்பு எண்ணிலடங்கா சர்ச்சைகளிலும் சிக்கி வருபவரும் கூட, இந்த நிலையில், சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கடந்த சில தினங்களுக்கு முன் கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட சிம்பு, தனது தந்தைக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
சிம்பு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால், டி.ஆர். மன வருத்தத்தில் இருந்ததாகவும், இதன் காரணமாகத் தான் அவருக்கு தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளுடன் காதல் வலையில் சிக்கிய சிம்பு, பின்னர் அவர்கள் இருவரையும் பிரேக் அப் செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை நிதி அகர்வாலை சிம்பு காதலித்து வருவதாகவும், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. இதுகுறித்து சிம்பு தரப்பு எந்தவித விளக்கமும் கொடுக்கவில்லை.
மேலும், கடந்த சில தினங்களாக சீரியல் நடிகை ஸ்ரீநிதி என்பவர் நடிகர் சிம்பு தனக்கு லவ் டார்ச்சர் கொடுத்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி சிம்புவின் வீட்டு முன் அவர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இந்த விவகாரம் தான் தற்போது டி.ஆரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது.