ஆய்வு பணியின் போது மயங்கி விழுந்த ஊழியர் : தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆட்சியர்… குவியும் பாராட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2022, 2:12 pm

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த போது பணிபுரிந்த ஊழிர் மயங்கி விழுந்ததால் உடனே தனது காரில் அழைத்து சென்ற ஆட்சியரின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.

தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று காலை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு பணிக்காக சென்றார்.

அப்போது அங்கு பணிபுரிந்த தினேஷ் என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மயங்கி விழுந்ததைக் கண்ட ஆட்சியர் தன் வாகனத்தில் ஏற்றி அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்து முதல் உதவி செய்த பின்பு அவரை நேரில் சென்று நலம் விசாரித்து இரண்டு நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றார்.

மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு செய்த உதவி அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…