ஏன் இப்படி நடந்துக்கிறீங்க.. பிரபல நிகழ்ச்சியில் அழுத நடிகை கீர்த்தி ஷெட்டி ! Viral Video.!

Author: Rajesh
30 May 2022, 5:34 pm

ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது.

இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

இவருக்கு வெறும் 18 வயசு தானாம். இவர் நானி அவர்களுடன் நடித்த Shyam Singha Roy மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுஇ மேலும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நானிக்கு லிப் கிஸ் கொடுத்துள்ள காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோ செம்ம வைரல்.

சமீபத்தில், விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற போது, அந்த தொகுப்பாளர்கள் பேட்டியின் போது பிராங்க் செய்துள்ளனர். அப்போது இரு தொகுப்பாளர்கள் இருவரும் சண்டை போடுவது போல பிராங்க் செய்துள்ளனர்.

பின்னர் அதனை பிராங்க் என கீர்த்தியிடம் கூறிய பின்பு சிரித்துக்கொண்டே சொன்னவுடன், நடிகை கீர்த்தி அழுதுள்ளார். தாம் கடுமையாக பேசி கேட்டாலே அழுதுவிட கூடியவர் என கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 1740

    7

    3