பொது அறிவுகூட இல்லையா..? பத்திரிக்கையாளர்களை பார்த்து கேட்ட திமுக எம்பி தயாநிதி மாறன்… வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!

Author: Babu Lakshmanan
30 May 2022, 5:48 pm

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், மின்தடை, நில அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளும் அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதேவேளையில், பத்திரிக்கை சுதந்திரத்தை திமுக ஆட்சி நசுக்கி விட்டதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.

குறிப்பாக, அண்மையில் பிரபல வார இதழ் மற்றும் அதன் இயக்குநர் மீது தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் அளித்த புகாரின் பேரில், போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே, இந்த நிறுவனம் திமுக நிர்வாகிகளுக்கு நெருக்கமானது என்பதால், போலீசார் உடனே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பத்திரிக்கை சுதந்திரத்திற்கு இது அச்சுறுத்தலானது என்றும் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் கருத்துக்களை கூறி வந்தனர்.

இந்த நிலையில், பத்திரிக்கையாளர்களை திமுக எம்பி தயாநிதி மாறன், பொது அறிவுகூட இல்லையா..? என்று கேள்வி எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய அரசின் திட்டம் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “Common sense வேணாம், சில திட்டங்களுக்கு மாநில அரசின் பங்கும் இருக்கும்,” என்று அவர் கூறுகிறார்.

இந்த வீடியோ எப்போது நிகழ்ந்தது என்பது தெரியாத நிலையில், தற்போது அவரது இந்தப் பேச்சு வைரலாகி வருகிறது. இந்தப் பேச்சு பத்திரிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, திமுக எம்பி தயாநிதி மாறன் தலைமை செயலாளரை சந்தித்த பின் அளித்த பேட்டியின் போது, ‘நாங்கள் என்ன தாழ்த்தப் பட்டவர்களா’ என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!