நண்பருடன் பழகினால்தான் சொத்தும், குழந்தைகளும்… மனைவிக்கு அதிர்ச்சி கண்டிஷனை போட்ட கணவர்…!

Author: Babu Lakshmanan
30 May 2022, 8:40 pm

சொத்துக்காக நண்பனுடன் சேர்ந்து நிலம், வீடு, குழந்தைகளை அபகரித்ததோடு நண்பனின் ஆசைக்கு துணை போக சொன்ன கணவர் மீது பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் சரளா. இவருக்கும் திருச்சி துறையூரை அடுத்த பாலகிருஷ்ணன் பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், கார்த்திக் சென்னையில் ஹரிப்பிரியா டிராவல்ஸ் என்கிற பெயரில் வாடகை ட்ராவல் ஏஜென்சி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதற்காக, தனது நண்பரான துறையூரை அடுத்த பி.மேட்டூர் ரவி என்பவருடன் இணைந்து சரளாவிடம் ஆசை வார்த்தைகளை கூறி, சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள வீடு மற்றும் திண்டிவனத்தில் உள்ள 5 ஏக்கர் சொந்தமான நிலம் உள்ளிட்ட சொத்துகளுக்கான பத்திரத்தை அபகரித்துள்ளார்.

மேலும், தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்று துறையூரில் உள்ள அம்மா வீட்டில் வைத்துள்ளதாகவும், சொத்து பத்திரம், குழந்தைகளை கேட்டால் நண்பனுடன் பழகுமாறு வற்புறுத்தியதாக பல திடுக்கிடும் தகவல்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவுடன் சரண் அடைந்தார் சரளா.

தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், ஆசை வார்த்தை கூறி நல்லவர் போல் நடித்து தன்னுடைய சொத்துக்களையும், குழந்தைகளையும் அபகரித்த கணவர் மற்றும் அவரது நண்பர் ரவி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 720

    1

    0