LUNCH WITH COLLECTOR : பள்ளியில் ஆய்வு நடத்திய போது மாணவிகளுடன் மதிய உணவு அருந்திய ஆட்சியர்.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2022, 1:41 pm

திருப்பத்தூர் : ஏகலைவா மாதிரி பள்ளியில்  ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம்  புதூர் நாடு பகுதியில் உள்ள அரசு  ஏகலைவா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் திருப்பத்தூர்   மாவட்ட  ஆட்சியர் அமர் குஷ்வாகா நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பள்ளி மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின்  மாணவிகளுடன் அமர்ந்து  மதிய உணவு சாப்பிட்டார்.

அப்போது உடன் திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் உட்பட அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 973

    0

    0